“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது பழமொழி. உலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் உடல்நலம் இல்லாவிட்டால் பயனில்லை. ‘சுவரை வைத்துத் தானே சித்திரம்’ என்றும் சொல்வதுண்டு. அதனால் வாழ்விற்கு மன, உடல் ஆரோக்கியம் அவசியம். இதற்குரிய தெய்வமாக சூரியன் இருக்கிறார். இவருக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் சூரிய ஹோரையில் (காலை 6:00 – 7:00) செந்தாமரை மலரிட்டு வணங்கினால் உடல்நலம் சிறக்கும். ‘கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்’ என்பது சூரியனின் பெருமையை எதிர்மறையாக சொல்கிறது. இப்பழமொழி ‘கண் பெற்ற பயன் சூரியனை வழிபடுவதே’ என கூறுகிறது.