ஒரு ஆண்டின் பன்னிரண்டு மாதங்களில் சூரியன் இரு திசைகளில் பயணம் செய்வதாகக் குறிப்பிடுவர். தை முதல் ஆனி வரையிலும் வடதிசையிலும், ஆடி முதல் மார்கழி வரையிலும் தென்திசையிலும் சூரியன் பயணிக்கிறார். இதை உத்தராயணம், தட்சிணாயனம் என்று கூறுவர். பூலோகத்தைப் போல, தேவலோகத்திலும் பகல், இரவு உண்டு. இதில் உத்தராயண காலம் தேவர்களுக்கு பகலாகவும், தட்சிணாயணம் இரவாகவும் இருக்கும். ஆறு மாதமாக தென்திசையில் பயணித்த சூரியன் வடதிசைக்கு திரும்பும் நாளான தை முதல்நாளில் பொங்கல் கொண்டாடுகிறோம். இந்த நாளில் சூரியனை வழிபாடு செய்வதால் வாழ்வு செழிக்கும்.