நெல் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் வேளையில், விவசாயத்திற்கு துணைநின்ற சூரியன், மாடு, பணியாட்கள் ஆகியோருக்கு நன்றி செலுத்தும் விழா பொங்கல். சூரியன் தன் செங்கதிர்களால் உலகிற்கு ஒளியூட்டுகிறார். கடல்நீரை ஆவியாக்கி மழை பொழியச் செய்கிறார். கிருமிகளை அழித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டுகிறார். மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்பவர் சூரியனே. அவருக்குரிய நாளாக இப்பொங்கல்நாள் அமைந்துள்ளது. சூரியனுக்கு தைப்பொங்கலும், கால்நடைகளுக்கு மாட்டுப்பொங்கலும், உறவினர்,நண்பர், பணியாட்களை பாராட்டும் விதமாக காணும் பொங்கலும் அமைந்துள்ளன.