தைமாத வளர்பிறை சப்தமி நாளை ரதசப்தமியாக கொண்டாடுவர். இந்நாளில் சூரியனின் ரதம் மேற்கு நோக்கி நகர்வதாக ஐதீகம். அன்று காலை சுமங்கலிகள் குளிக்கும் போது ஏழு எருக்க இலைகளையும், சிறிது அட்சதையையும் வைத்துக் கொண்டு நீராட வேண்டும். ஆண்கள் நீராடும் போது ஏழு எருக்க இலைகளையும், அரிசியையும் வைத்து நீராட வேண்டும். பூஜையறையில் தேர்க்கோலமிட்டு சர்க்கரைப்பொங்கல், வடை நெய்வேத்தியம் செய்து சூரியனை வழிபடவேண்டும். இதனால் ஆரோக்கியம், ஐஸ்வர்யம் மிக்க வாழ்வு அமையும்.