Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் தைப்பூச ... மருதமலையில் தைப்பூச திருவிழா கோலாகலம் மருதமலையில் தைப்பூச திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேகளீச பெருமாள் பனிப்போர்வை அணிந்து ஆஸ்தானம் எழுந்தருளினார்
எழுத்தின் அளவு:
தேகளீச பெருமாள் பனிப்போர்வை அணிந்து ஆஸ்தானம் எழுந்தருளினார்

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
04:01

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் ஒருபகுதியாக இராபத்து உற்சவத்தில் பெருமாள் பனிப் போர்வை போர்த்தி ஆஸ்தானம் எழுந்தருளினார்.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை தொடர்ந்து இராப்பத்து உற்சவம் கடந்த 13ம் தேதி துவங்கியது. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, கோவிலை வலம் வந்து, உடையவர் சன்னதியில் மண்டகப்படி நடந்தது. தொடர்ந்து பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, நம்மாழ்வார் எதிர்கொண்டு சேவிக்க பரமபதம் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.

இரவு 8:00 மணிக்கு திருவாய்மொழி, சேவை சாற்றுமறை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் நடந்தது. தேகளீச பெருமாள் மெல்லிய இழை கொண்ட போர்வையால் திருமுகம் தெரிய பொருத்தப்பட்டு ஆஸ்தானம் எழுந்தருளினார். ராப்பத்து உற்சவத்தின் பத்து நாட்களும் இச்சேவை நடக்கிறது. சிறப்பான இக்காட்சியைக் காணும் பக்தர்களுக்கு பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகளன் மேற்பார்வையில் செய்திருந்தனர். கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி விழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar