இளையான்குடி: தேவாத்தக்குடி கொட்டாருடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூலை 6 மாலை 4.35 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. ஜூலை 7ல் காலை 8.45 மணிக்கு 2 ம் கால யாகபூஜையும் , மாலை 5.30 மணிக்கு 3 ம் கால யாக பூஜையும் நடந்தது. ஜூலை 8 ல் காலை 6 மணிக்கு 4 ம் கால யாக பூஜையும் , கோமாதா பூஜையும் , காலை 11 மணிக்கு கும்பாபிஷேகமும் நடந்தது. பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. விழாவில் தாயமங்கலம் ஊராட்சி தலைவர் வசந்தா , துணை தலைவர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை டிரஸ்டி சுப்பிரமணியன், தேவாத்தக்குடி , வில்லிசேரி கிராம மக்கள் செய்திருந்தனர்.