தென்காசி: குத்துக்கல்வலசை சீவலப்பேரி சுடலை கோயிலில் வரும் 17ம் தேதி கொடை விழா துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. தென்காசி அருகே குத்துக்கல்வலசை சீவலப்பேரி சுடலை, பார்வதி அம்மன், பேச்சியம்மன் கோயிலில் வரும் 17ம் தேதி கொடை விழா துவங்குகிறது. அன்று காலையில் காப்பு கட்டுதல், சிறப்பு தீபாராதனை, மாலையில் குற்றாலத்திலிருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வருதல், இரவு முளைப்பாரி ஊர்வலம், சிறப்பு பூஜைகள், வில்லிசை கச்சேரி, சாம கொடை நடக்கிறது. இரண்டாம் நாளான 18ம் தேதி காலையில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ராமசாமி தலைமையில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.