Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரிய வலம்புரி விநாயகர் கோவிலில் ... செஞ்சியில் இருந்து பக்தர்கள் திருப்பதிக்கு நடைபயணம் செஞ்சியில் இருந்து பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தரமான பிரசாதம் வினியோகம்: 314 கோவில்களுக்கு தரச்சான்றிதழ்
எழுத்தின் அளவு:
தரமான பிரசாதம் வினியோகம்: 314 கோவில்களுக்கு தரச்சான்றிதழ்

பதிவு செய்த நாள்

25 ஜன
2022
10:01

சென்னை : பக்தர்களுக்கு தரமான பிரசாதம், அன்னதானம் வழங்கும் வகையில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவன தரச்சான்றிதழ்கள் பெற்ற கோவில் செயல் அலுவலர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து, சான்றிதழ்களை வழங்கினார்.

ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில்.திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில்; சமயபுரம் மாரியம்மன் கோவில்; திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகியவற்றில், நாள் முழுதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்துடன், 754 கோவில்களில் ஆண்டுக்கு 76 கோடி ரூபாய் செலவில், தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம், மத வழிபாட்டு தலங்களில், இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாத வகைகளை பரிசோதித்து, தரச் சான்றிதழ்களை வழங்கி வருகிறது. கடந்த ஆட்சியில் ஆறு கோவில்களுக்கு தரச் சான்றிதழ்கள் பெறப்பட்டன. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் 308 கோவில்களுக்கு தரச் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும், 440 கோவில்களுக்கு சான்றிதழ்கள் பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுதும் 394 மத வழிபாட்டு தலங்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசால் 314 கோவில்களுக்கு தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இதன் வழியே, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம், சுத்தமாகவும், சுகாதார முறையிலும் தயாரித்து வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்துள்ளது. தரச்சான்றிதழ் பெற்றதை பாராட்டும் வகையில், 10 கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் இணை ஆணையர்களை பாராட்டி, தரச்சான்றிதழ் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar