பதிவு செய்த நாள்
25
ஜன
2022
04:01
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சமஸ்தானத்திற்குட்பட்ட கோதண்டராமர் கோயில் அரண்மனை பின்புறத்தில், சிவன்கோயில் அருகே அமைந்துள்ளது. இங்கு கடந்த 2004ல் கும்பாபிேஷகம் நடந்தது.
அதன்பின் கடந்த சில மாதங்களாக குடமுழுக்கு விழா திருப்பணிகள் நடந்தன. மகாகும்பாபிேஷகத்தை முன்னிட்டு, ஜன.,21ல் கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் நடந்தன. ஜன.,23ல் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாகசாலை பூஜைகளில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் நிரம்பிய கலசநீர் மூலவர், ராஜகோபுர விமானங்களில் ஊற்றப்பட்டு காலை 10:00மணிக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் சீதாதேவி, லட்சுமண சமேத கோதண்ட ராமர், சக்கரத்தாழ்வார், ஜெயவீர ஆஞ்சநேயர், கருடாழ்வார் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக கோயில் குருக்கள், நிர்வாகத்தினர், உபயதாரர்கள் மட்டும் தரிசனம்செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் பலர் வெளியே நின்று தரிசனம் செய்தனர்.