* ஒரு செயலை செய்து முடிக்குவரை யார் கேட்டாலும் அதைப்பற்றி சொல்லாதே. * உன்னுடைய பேச்சை பொறுத்தே உன் எதிர்காலம் உள்ளது. * உனக்கு உதவி செய்தவர்களை ஒருபோதும் மறக்காதே. * மகான்களின் சந்திப்பு கிடைத்துவிட்டால் உன் தலைமுறையே ஒளிரும். * பெரியவர்களின் அறிவுரையை கேட்டால் நல்ல பாதையில் பயணிக்கலாம். * ‘தினமும் நமக்கு சாப்பிட உணவு கிடைக்கிறதே’ என திருப்தியாக இரு. * மனதை அமைதியாக வைத்துக்கொள். மகிழ்ச்சி எங்கே உள்ளது என தெரியும். * முட்டாளாக இருக்காதே. எல்லா விஷயத்தையும் அறிந்துகொள். * பிறர் வீட்டிற்கு சென்று வாழ்வதுதான் நமக்கு மிகவும் கஷ்டமான விஷயம். * குழந்தைகளுக்காக சொத்து சேர்ப்பதை விட அவர்களுக்கு நல்லதை சொல்லிக்கொடு. * உனக்கு ஒன்றுமே தெரியாது என்றாலும் பரவாயில்லை. தினமும் படி அறிவாளியாகிவிடுவாய். * தினமும் கடவுளை வணங்கு. உனது பாவம் குறையும். * கடவுளின் பார்வை உன்மீது விழுந்தால் மட்டுமே முயற்சியில் வெற்றி பெறுவாய். * எப்போதும் மகிழ்ச்சியாக இரு. கடினமான பணிக்கூட எளிதாகிவிடும்.