* கடவுளை நம்பு. அப்போதுதான் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவாய். * நல்லதை செய்தால் நிச்சயம் நல்லது நடக்கும் என்று நம்பு. * உயிர் வாழ உணவு தேவை. அதுபோல் சுதந்திரமாக வாழ சிலவற்றை தியாகம் செய். * அனைவரிடமும் அன்பு காட்டுவதே தர்மத்தில் சிறந்தது. * நீ பலவீனமாக இருந்தால்தான் உனக்கு தீய சிந்தனை தோன்றும். * பிறருக்கு உதவி செய். அதற்கு அளப்பறிய சக்தி உள்ளது. * அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே. உன் வாழ்நாள் முழுவதும் அறிவுக்கதவு திறந்தே இருக்கட்டும். * எதற்கெடுத்தாலும் சந்தேகப்படாதே. அதுதான் உன் மனதிற்கு நல்லது. * பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்றால்தான் நல்ல பண்பை வளர்த்துக்கொள்ள முடியும். * கோபப்படாதே... அது உன் முகத்தின் அழகை கெடுக்கும். * வாழ்வின் ஜீவநாடியான நீதியை காப்பது நம் கடமை. * தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே இதற்கு தீர்வு. * மனதில் தீய எண்ணம் தோன்றும்போதே அதை அகற்றிவிடு.