முருகக்கடவுள் எட்டு திருவடிவங்களில் எழுந்தருளும் அஷ்ட மூர்த்திகளாக எழுந்தருளும்போது, அவர் ஏறி வரும் மயில்களை அஷ்ட மயில் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். இந்த மயில்கள் எட்டுத் திக்கிலும் இருந்துகொண்டு உலகை காக்கும் என்பது நம்பிக்கை. முருகன் கோயில்களில் அவர் எழுந்தருளியிருக்கும் பீடத்தில் எட்டுத் திக்கிலும் காணப்படும். பழநி மலையின் எட்டு திக்கிலும் மயில் மண்டபங்கள் அமைக்கப்பட்டு. எட்டு மயில்கள் எழுந்தருளி வைக்கப்பட்டுள்ளன! மயிலை வழிபடும் முறை பற்றி குமார தந்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, நடுவில் ஒரு கலசத்தை வைத்து, அதைச் சுற்றி எட்டு கலசங்களை அமைக்கின்றனர். அவற்றில் எட்டு மயில்களை பூஜிக்கிறார்கள். இவற்றின் பெயர்கள் புஜங்க புவன், நீலகண்டன், கணப்பிரியன், கலாபினன், சிகிவர்ஹி, பீலிபிஞ்சினன் மற்றும் கேசினி. பொதுவாக தெய்வங்கள் எழுந்தருளும் பீடத்தில் அஷ்டதிக்கு பாலகர்கள், அஷ்டசக்தியரை பூஜிப்பார்கள். அந்த பீடத்தின் முகப்பில் அந்தந்த தெய்வங்களின் வாகனங்களை அமைப்பார்கள். இந்த வகையில், முருகனின் பீடத்தில் மயில் நின்றிருப்பது போலவும் அமைக்கப்படுகிறது. இதற்கு பீட மயில் என்று பெயர்.