புதுச்சேரி : கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், சனி பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலை, கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தை மாத தேய்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை நந்தி பகவானுக்கு, பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.பிரதோஷ பூஜைக்கான ஏற்பாடுகளை கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் செய்திருந்தார். பூஜைகளை தேவசேனாதிபதி குருக்கள் செய்தார்.சேது மற்றும் சீனு குருக்கள் உடனிருந்தனர்.இதனிடையே புதுச்சேரி கவர்னர் தமிழிசை சனி பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்