புற்று மாரியம்மன் கோவிலில் 6ம் தேதி மகா கும்பாபிேஷகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2022 03:01
புதுச்சேரி : குருமாம்பட்டில் உள்ள புற்று மாரியம்மன் கோவில் மகா கும்பாபிேஷகம் வரும் 6ம் தேதி நடக்கிறது.குருமாம்பட்டு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள புற்றுமாரியம்மன், சுப்ரமணிய சுவாமி கோவில் புதுப்பிக்கப்பட்டு, ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனையொட்டி வரும் 6ம் தேதி மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.இதற்கான பூர்வாங்க பூஜை வரும் 3ம் தேதி காலை விக்னேஷ்வரர் பூஜை மற்றும் மகா கணபதி ேஹாமத்துடன் துவங்குகிறது. மறுநாள் கோ பூஜை, மகாலட்சமி ேஹாமம், அஸ்த்ர ேஹாமம், கோபுர கலசம் மற்றும் நுாதன விக்ரகம் கரிகோலம் நடக்கிறது. அன்று மாலை யாகசாலை பூஜை துவங்குகிறது.வரும் 6ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜை, பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடாகி காலை 9:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி கோவில் விமானம் மற்றும் மூலவர் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 9:15 மணிக்கு மேல் புற்றுமாரியம்மன் கோவில் ராஜகோபுரம், விமானம் மற்றும் பரிவாரங்களுக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.