தை அமாவாசை வழிபாடு: சதுரகிரியில் குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2022 07:01
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு வெளி மாவட்ட பக்தர்கள் மாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பிரதோஷத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து திரும்பினர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் ஆனதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து திரும்பினர். இந்நிலையில் நாளை தை அமாவாசையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக இன்று மாலை 6 மணி முதல் தாணிப்பாறை மலை அடிவார தோப்புகளுக்கு வெளிமாவட்ட பக்தர்கள் வரத் துவங்கினர். நாளை அதிகளவில் பக்தர்கள் வரக்கூடும் என்பதால் விருதுநகர், மதுரையிலிருந்து தாணிப்பாறைக்கு நேரடி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்துள்ள நிலையில், வனத்துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.