திட்டக்குடி: ராமநத்தம் அடுத்த கல்லூர், ஆ.பாளையம் கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியலை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநத்தம் அடுத்த ஆ.பாளையம் கிராமத்தில் மெயின்ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூட்டை உடைத்து உள்ளிருந்த உண்டியலை நேற்று அதிகாலை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். ராமநத்தம் பகுதியில் தொடர்திருட்டு நடப்பதையொட்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12மணிக்கு ஆ.பாளையம் கோவிலில் ஆய்வு செய்துவிட்டுச்சென்ற போலீசார், மீண்டும் அதிகாலை 2.30 மணியளவில் வந்துபார்த்தபோது உண்டியல் காணாமல் போனது தெரிந்தது. இதேபோல் கல்லூர் மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து உள்ளிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். கடந்த ஒருவாரத்தில் ராமநத்தம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்களில் தொடர்ச்சியாக திருட்டு நடப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.