பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று தை அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. 8:30 மணிக்கு மூலவர் பெருமாள் அனைத்து பழங்களுடன் பழபந்தலில் பிருந்தாவன் கண்ணனாக அருள்பாலித்தார். 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக உள் புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.