ஏரல்: ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில்,தை அமாவாசை திருவிழா கோலாகலமாக நடந்தது. தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றானது ஏரல் சேர்மன் அருணாசலசுவாமி கோயில் ஆகும். இக் கோயிலில் ஆடி, மாவாசை தினங்கள் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டு மாவாசை திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. தை அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு, மதியம் 1:00 மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனமும், அபிஷேகமும் நடந்தது. மாலை5:00 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மன் திருக்கோல காட்சியும், இரவு 10:00 மணிக்கு 1ம் காலம் சிகப்பு சாத்தி கற்பகப் பொன் ரத்தில் சுவாமி உலா நடந்தது. விழாவில் இன்று (1ம் தேதி )) அதிகாலை 5:00 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரிசனமும், காலை 8:30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகமும், நண்பகல் 1:30 மணிக்கு 3ஆம் காலம் பச்சை சாத்தி தரிசனமும், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் பந்தலில் தாக சாந்தியும், இரவு 10:00 மணிக்கு கோயில் மூலஸ்தானம் சேரும் ஆனந்தக் காட்சியும் நடைபெறும்.