புதுச்சத்திரம், சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில் மாதம் தோறும், அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம். இந்த மாதம் ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. அன்று மாலை 6.00 மணிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 9.00 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, தாலாட்டு பாடி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பூவாலை அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.