பதிவு செய்த நாள்
03
பிப்
2022
06:02
கடையம்: கடையத்தில் குப்பைகளை கொட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிகளில் முதுமக்கள் தாழி, சுவாமி சிலைகள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் அகழாய்வு செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடையம் ஜம்புநதியை ஒட்டி தெற்கு கடையம் பஞ்.,சிற்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில், குப்பைகளை கொட்டுவதற்காக ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டன. அப்போது முதுமக்கள் தாழிகள், ப ழங்கால ஓடுகள், சுவாமி சிலைகள் கிடைத்தன. இந்த தகவல் தொல்லியல் துறைக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொல்லியல் துறை இந்த இடத்தில் முறையான ஆய்வு மேற் கொண்டால் கீழடியை போன்றே பழங்கால தமிழர்களின் வரலாறு வெ ளிப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கடையத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஜம்புநதியும், ராமநதியும் ராமாயண புராணத்துடன் தொடர் புடையது. தசரதர், பாப விமோசனத்திற்காக வில்வவனநாதர்–நித்யகல்யாணி அம்பாளை வழிபட்டுள்ளார். பழங்காலத்தில் பல சம்பவங்கள் நிகழ்ந்த பகுதியாகவும், முற்காலத்தில் விக்கிரமபாண் டியநல்லூர் என்றழைக்கப்பட்ட கடையம்பகுதியில் ஆற்றங்கரை தொல்குடி நாகரீகம் இருந்ததாகவும் பலதரப்பட்ட தகவல்கள் உள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாண்டிக்கோவை என்ற நூலில் கூட கடையம் குறிக்கப்பட்டு உள்ளது. அந்நூல், இந்த ஊரை கடையல் என்று குறிப்பிடுகிறது. கடையம் என்ற ஊரை சேரர்களும்பாண்டியர்களும் ஆட்சி செ ய்திருக்கிறார்கள். சுந்தரபாண்டியனின் ஆட்சி கல்வெட்டில் இவ்வூரை கோநாடு விக்கிரபாண்டியநல்லூர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜடா வர்மன் ஸ்ரீவல்லபனின் 18ம் ஆட்சி ஆண்டு கல்வெட்டும் கடையத்தை குறிப்பிடுவதால் இவ்வூரில் பழங்கால நாகரீகம் இருந்தது உறுதியாகிறது. கீழடியை தாண்டிய பொக்கிஷங்கள் கடையத்தில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில்
உள்ளன என்பது சமூக மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் கருத்தாகும்.