திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் பாலஸ்தாபன விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2022 03:02
திருப்பட்டூர் :
கடவுள் பிரம்மா தான் இவ்வுலகை உருவாக்கியவர். முழுமுதல் கடவுளாகிய நான் தான் சிவனை விட பெரியவன் என்ற அகங்காரம் பிரம்மாவிடம் வந்தது. இதனால் கோபம் அடைந்த சிவன் பிரம்மாவின் ஐந்தாவது முகத்தை கொய்து அவரது படைத்தல் அதிகாரத்தை நீக்கி சாபம் இட்டார். இச்சாபத்தில் இருந்து விடுபட சிவனை வேண்டி பிரம்மா சிவாலயங்களுக்கு யாத்திரையை தொடங்கினார். அப் புனித யாத்திரையின் போது இத்தலத்திற்கு வந்து 12 சிவ லிங்ககளை பிரதிஷ்டை செய்து பிரம்மபுரீசுரவரை வழிப்பட்டார். பிரம்மாவின் வழிபாட்டால் மகிழ்ந்த சிவன் பார்வதி தேவியின் வேண்டுகோளை ஏற்று மகிழ மரத்தின் கிழ் அவருக்கு தரிசனம் கொடுத்து சாப விமோசனம் கொடுத்தார். பிரம்மா அவரின் படைத்தல் அதிகாரத்தை திரும்பப் பெற்றார். சிவன் பிரம்மாவை வாழ்த்தி அவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உருவாக்கி அருளினார். மேலும் சிவன் இத்தலத்தில் பிரம்மாவின் தலையெழுத்து திரும்ப எழுதப்பட்டதால், பிரம்மாவை தரிசிக்கும் பக்தர்களின் தலையெழுத்தை மாற்றும் படி பிரம்மாவிற்கு உபதேசம் செய்தார். இதனால் திருப்பட்டுர் பிரம்மாவை தரிசித்தால் திருப்பம் ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கை. இக்கோயிலில் கோயிலில் பாலஸ்தாபன விழா வரும் 11ம் தேதி காலை 9.00 மணிக்கு மேல் 12.22 மணிக்கு பிரம்மபுரீஸ்வரர் கோயில் பாலஸ்தாபனம் மற்றும் விமானங்களுக்கு நடைபெறுகிறது.