பதிவு செய்த நாள்
07
பிப்
2022
03:02
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் இன்று 4ம் ஆண்டு கும்பாபிஷேகம் நாளை முன்னிட்டு சம்வஸ்திரா அபிஷேகம் நடைபெற்றது.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் ராஜகோபுரம் மற்றும் சொர்ணகணபதி, முருகன், தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை மற்றும் சனிபகவான் உள்ளிட்ட சன்னதிகள் புனரமைக்கப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் நடந்த மாத உத்திராட நட்சத்திர நாளில் சம்வஸ்திரா அபிஷேகம் நடத்தப்படுகிறது. இன்று 4ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நாளை முன்னிட்டு நேற்று மாலை விக்கேஸ்வர பூஜை,கணபதி ஹோமம்,புன்யாவாஜனம், விஷேசகும்பபூஜையும், பூர்ணாஹீதி நடந்தது. யாக பூஜைகள் முடிந்து பூஜைசெய்த இன்று கலசங்கள் கோவில் உட்பிரகாரத்தில் சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின் தர்பாரண்யேஸ்வரர், சொர்ணகணபதி, பிரணாம்பிகை, முருகன்,சனிஸ்வரபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடந்தது.இதில் தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.