தேவதானப்பட்டி: தேவதானப்பட்டிஅருகே சில்வார்பட்டி தெற்கு தெருவில் பெரிய மற்றும் சின்னமுத்துக்காமு அம்மன் கோயில் 14 ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. காலையில் கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கிய பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையுடன் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் நிர்வாகம் செய்திருந்தனர்.