திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட கலசப்பாக்கம் ஆற்றில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
சப்தமியை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட கலசப்பாக்கம் ஆற்றில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. விழாவில், ரிஷப வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், மற்றும் ரிஷப வாகனத்தில் திரிபுரசுந்தரி உடன் திருமாமுனீஸ்வர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி செய்தனர்.