ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2022 10:02
சதுர்வேதமங்கலம்: சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. குன்றக்குடி ஆதீனத்திற்குட்பட்ட இக்கோயிலின் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கிராம மக்கள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்தில் கொடியேற்றினர். 10 நாள் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வருவார். பிப். 11-ம் தேதி காலை 10:00 மணிக்கு ஆத்மநாயகி அம்பாள் ருத்ரகோடீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. பிப். 12 ல் கழுவன் திருவிழாவும், பிப். 15ல் தேரோட்டமும் நடக்கிறது. திருவிழாவின் கடைசி நாளான பிப். 16ம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. நேற்று இரவு 7:00 மணிக்கு கோயிலில் இருந்து 3 கி.மீ., தூரமுள்ள அரளிப்பாறை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு மயில் வாகனத்தில் சுப்பிரமணியர் எழுந்தருளினார். அங்கும் கொடியேற்றப்பட்டு திருவிழா துவங்கியது.