அவிநாசி, மடத்துப்பாளையம் ரோட்டிலுள்ள, பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது. கோவிலில் திருப்பணி வேலைகள் நிறைவுற்று கும்பாபிேஷக விழா கடந்த, 5ம் தேதி துவங்கியது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலிலிருந்து தீர்த்தக்குடங்களை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் யாகசாலையில், வைத்தனர். அதன்பின், கணபதி ேஹாமத்துடன் பூஜைகள் துவங்கின. யாகசாலை பூஜைகள் நிறைவுற்று நேற்று காலை, 9:40 மணிக்கு கோபுரம் மற்றும் மூலவ மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் செய்விக்கப்பட்டது. கும்பாபிேஷக பூஜைகளை, அவிநாசி கோவில் ஆரூர சுப்ரமண்ய சிவம் தலைமையில், சிவாச்சார்யார்கள் மேற்கொண்டனர்.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூலவ மூர்த்திக்கு மகாபிேஷகம் செய்விக்கப்பட்டு, அலங்கார தீபாராதனை நடந்தது.