சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ரகோடீஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது.
குன்றக்குடி ஆதீனத்துக்குட்பட்ட இக்கோவிலின் மாசிமகத் திருவிழா பிப். 7 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவாக தினமும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் வீதிவுலா வந்து அருள்பாலிக்கிறார். ஐந்தாம் நாளான இன்று ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி காலை 9:00 மணிக்கு ஆத்ம நாயகி அம்மன், பிரியாவிடையுடன் ருத்ரகோடீஸ்வரர் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். காலை 10:00 மணிக்கு கிராமமக்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று திருக்கல்யாண கோலத்தில் இறைவன், இறைவியை வழிபட்டனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆறாம் திருவிழாவான இன்று கழுவன் திருவிழாவும் பிப். 15 ல் தேரோட்டமும் நடக்கிறது.