மயிலாடுதுறை: சீர்காழி வடபாதி மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வடபாதி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தைமாதம் கடைசி வெள்ளி அன்று தீமிதி மற்றும் செடல் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த மாதம் 31 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 ம் நாள் திருவிழாவான இன்று இரவு தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற்ற செடல் உற்ச்சவத்தில் 200க்கு மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி அளகு காவடி எடுத்தும், பால் குடம், பறக்கும் காவடி, எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இவ்விழாவில் பல்வேறு கிராமங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று மாரியம்மனை தரிசனம் செய்தனர்.