முறப்பநாடு நங்கமுத்து அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2022 03:02
செய்துங்கநல்லுார்: துாத்துக்குடி மாவட்டம், முறப்பநாட்டில்அமைந்துள்ள நங்கமுத்து அம்மன் கோயிலில், 14வது வருஷாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. இதை முன்னிட்டு, காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி மம் நடந்தது. தொடர்ந்து கோபுரத்தில் உள்ள விமானங்களுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரமும், பின்னர் தீபாராதனைகள் நடந்தன. இது 14வது வருஷாபிஷேகம் ஆகும். அடுத்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளதாக, கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.