பதிவு செய்த நாள்
12
பிப்
2022
11:02
பெரியபட்டினம்: வண்ணாங்குண்டு கிராமத்தில் பாமா ருக்மணி சமேத சந்தான கோபால கிருஷ்ணர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த பிப்.,8 அன்று முதல் கால யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்தவுடன் காலை 10 மணிக்கு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
மூலவர் சந்தான கோபால கிருஷ்ணர், கருடாழ்வார், சூரியன், சந்திரன்,லஷ்மி நரசிம்மர், ஹயக்ரீவர், தன்வந்திரி, விஷ்ணு துர்க்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பூஜைகளை உத்தரகோசமங்கை முத்துக்குமார குருக்கள், டி.எம். கோட்டை நாகநாதன், மாதவன், ரெகுபதி ஐயங்கார் ஆகியோர் செய்தனர். கோயில் தலைவர் ரெத்தினம், செயலாளர் நாகராஜன், ஸ்தபதி முருகேசன், ஊராட்சித் தலைவர் தியாகராஜன், முத்துகிருஷ்ணன் உட்பட விழாக் குழுவினர் செய்திருந்தனர்.