ராஜபாளையம்: ராஜபங சொக்கர் கோயிலில் மாசி மகம் பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. இக்கோயில் மாசி மகா பிரம்மோற்ஸவ விழா பிப். 7ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள் நடைபெறும் திருவிழாவில் தினமும் அம்பாள் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருக்கல்யாணம், தெப்போற்ஸவத்தை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு பூஜை, அலங்காரத்துடன் வாத்தியங்கள் முழங்க தேரானது கோயில் அருகே உள்ள மானசரோவர் தெப்பத்திற்கு சென்று கோயிலை அடைந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து தரிசனம் செய்தனர்.