பழநி முருகன் கோயிலில் 1008 சங்காபிஷேக சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2022 10:02
பழநி: பழநி முருகன் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது.
பழநி முருகன் கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு மலைக்கோயில் பாராவேல் மண்டபத்தில் வெள்ளி சங்கு உற்பட 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜையில் வைக்கப்பட்டது. மாசி மகத்தை முன்னிட்டு யாக குண்டத்தின் கும்ப கலசங்களில் நீர் நிரப்பி யாகம் நடத்தப்பட்டது யாக பூஜையின் முடிந்தபின் தீபா தாரணை நடைபெற்றது புனிதநீர் உச்சிகால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.