கொப்பால்: கொப்பாலின் குஷ்டகி அருகே உள்ள ஹனுமசாகர் கிராமத்தில் உள்ள பனசங்கரி கோவில் திருவிழா, ஆண்டுதோறும் பிப்ரவரியில், பவுர்ணமியை முன்னிட்டு நடப்பது வழக்கம். அதுபோல, இந்த ஆண்டு திருவிழா, பிப்ரவரி 16 முதல் 18 வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. கொரோனாவால் எளிய முறையில் நடத்தப்பட்டது. சம்பிரதாய முறைப்படி, தேர் சிறிது துாரம் இழுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.