சத்துவாச்சாரி ஜலகண்டேஸ்வரரருக்கு சொந்தம் : கல்வெட்டு கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2022 07:02
வேலுார்: சத்துவாச்சாரி கிராமம், ஜலகண்டேஸ்வரரருக்கு சொந்தம் என்ற கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டம், வேலுார் சத்துவாச்சாகரி வேளாளர் தெருவில், அப்பர் சுவாமி கோவில் எதிரில், 1,000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ஒன்று உள்ளது. இதை சுத்தம் செய்து படி எடுக்கும் பணியை, தொல்லியல் துறை உதவி இயக்குனர் பூங்குன்றன் தலைமையில், வேலுார் அரசுங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன் உள்ளிட்டோர் செய்து வந்தனர். இந்த பணிகள் முடிந்தது.
இது குறித்து தொல்லியல் துறை உதவி இயக்குனர் பூங்குன்றன் கூறியதாவது: இந்த கல்வெட்டில் 28 வரிகள் உள்ளது. அதில், வேலுார் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலை கட்டியது சின்ன மொம்மி நாயக்கர் என்றும், இந்த கோவிலை பராமரிப்பதற்காக, சத்துவாச்சாரி கிராமத்தை தேவதானமாக கோவிலுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.