ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி சிவராத்திரி விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2022 05:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று (பிப்.,21) மாசி சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் கொடி மரகம்பத்தில் குருக்கள் திருவிழா கொடியை ஏற்றினர்.
ராமேஸ்வரம் திருக்கோயில் தை அமாவாசை, ஆடி திருக்கல்யாணம், மாசி சிவராத்திரி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி மாசி சிவராத்திரி விழாவிற்கு இன்று கோயில் சுவாமி சன்னதி எதிரே உள்ள கம்பத்தில் காலை திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதனைதொடர்ந்து கோயிலில் 12 நாட்கள் மாசி திருவிழா நடைபெறும். இதில் மார்ச் 1ல் மகா சிவராத்திரி விழா மற்றும் மாசி தேரோட்டம் வீதி உலா நடைபெற உள்ளது. இவ்விழாவின் போது தினமும் சுவாமி, அம்மன் தங்கம், வெள்ளி வாகனத்தில் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறும் என கோயில் இணை ஆணையர் பழனிகுமார் தெரிவித்தார்.