Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூர் கோயிலுக்கு 1.5 ... நேமம் ஜெயங்கொண்ட சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேமம் ஜெயங்கொண்ட சோழீஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் மஹா சிவராத்திரி விழா காப்பு கட்டப்பட்டது
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் கோயிலில் மஹா சிவராத்திரி விழா காப்பு கட்டப்பட்டது

பதிவு செய்த நாள்

22 பிப்
2022
03:02

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் மஹா சிவராத்திரி, பாரிவேட்டை திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. காலையில் அபிஷேகம், பூஜை முடிந்து மூலவர்கள் அங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரமானது.

பின்பு மூலவர்கள் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. நந்தி மண்டபத்தின் மேல் தர்ப்பைப்புல் கட்டி மாலை அணிவித்து தீபாராதனை நடந்தது. திருவிழா நடைபெறும் மார்ச் 6வரை தினமும் பூஜை நடக்கும். பிப்.27ல் கப்பரை பூஜையும், மார்ச் 1ல் சுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், குருநாத சுவாமி கோயிலுக்கு புறப்பாடாகி அங்கு ஒரு வாரம் பூஜை, பாரிவேட்டை, பூப்பல்லக்கு முடிந்து அம்மன் மீண்டும் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்படுவார்‌. கோயில் பூசாரிகள் பூஜை ஏற்பாடுகள் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar