காரைக்குடி: காரைக்குடி அருகே நேமம் சவுந்தரநாயகி அம்பாள் சமேத ஜெயங்கொண்ட சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். பிப்.,16ல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளுடன் விழாதொடங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி முதற்கால யாக பூஜை தொடங்கி ஆறுகால பூஜை நடந்தது. பிப்.,20காலை 9:10மணிக்கு ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடத்தினர்.மாலை திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி, செந்தில்குமார் எஸ்.பி., பொன்னம்பல அடிகள், பிச்சை சிவாச்சாரியார் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நேமம் கோயில் நகரத்தார் செய்து இருந்தனர்.