புதுச்சேரி : நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா, வரும் 20ம் தேதி நடக்கிறது. நைனார்மண்டபம் நாக முத்து மாரியம்மன் கோவி லில் 29ம் ஆண்டு செடல் திருவிழா மற்றும் முத்து மாரியம்மன் கோவில் வருடாந்திரப் பெருவிழா நேற்று துவங்கியது. காப்புக் கட்டுதல், கொடியேற்றம் நடந்தது. 12 மணிக்கு பால்சாகை வார்த்தல், இரவு 7 மணிக்கு கும்பம் கொட்டும் நிகழ்ச்சி, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. 15ம் தேதி காலை கோ பூஜை, கஜ பூஜை, அசுவ பூஜையும், விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் திருவிழா 20ம் தேதி நடக்கிறது. அன்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, மாலை 4 மணிக்கு தேர் பவனி, செடல் உற்சவம் நடக்கிறது.