கீழப்பாவூர் நரசிங்க பெருமாள் கோயிலில் 15ல் மண்டலாபிஷேக பூஜை நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2012 11:07
திருநெல்வேலி : கீழப்பாவூர் நரசிங்க பெருமாள் கோயிலில் வரும் 15ம் தேதி மண்டலாபிஷேக நிறைவு பூஜை நடக்கிறது. கீழப்பாவூரில் 1100 ஆண்டுகள் பழமைவாய்ந்த லெட்சுமி நரசிங்க பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த ஜூன் 1ம் தேதி கும்பாபிஷேகம் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 45 நாள் மண்டல பூஜைகள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. நிறைவு பூஜை வரும் 15ம் தேதி ஞாயிறு காலை 9 மணிக்கு துவங்குகிறது. பஞ்ச சுக்த ஹோமம், வேத பாராயணம், அபிஷேக ஆராதனைகள், அன்னதானம் நடக்கிறது. மாலையில் 6.30 மணிக்கு சிறப்பு சகஸ்ரநாம பாராயணம், அர்ச்சனை, புஷ்பாஞ்சலியும் நடக்கிறது. கும்பாபிஷேகத்தில் பங்கேற்க முடியாதவர்கள் மண்டல பூஜை நிறைவு விழாவில் கலந்து கொண்டால் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். ஏற்பாடுகளை நரசிங்க பெருமாள் கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.