சிவராத்திரி விரதம் இருந்தால் ஆயிரம் முறை கங்கையில் குளித்த புண்ணியம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2022 03:02
மதுரை : சிவராத்திரி விரதம் இருந்தால் ஆயிரம் முறை கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும், என, மதுரையில் அனுஷத்தின் அனுகிரகம் சார்பில் நடந்த அனுஷம் சிறப்பு நிகழ்வில் எழுத்தாளர் இந்திராசெளந்தர்ராஜன் பேசினார்.
சித்தம் சிவம் சாகசம் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: ஒரு மாபெரும் பிரளயம் உருவாகி இப்பூமி மூழ்கியது. இதை கண்ட சக்திதேவி மீண்டும் உயிரினங்கள் தோன்றவும், மனித வாழ்வு மலரவும், தன் கணவரான சிவனை பூஜித்தாள். இதனால் மீண்டும் உயிர்கள் தோன்றி உலகம் மனிதர்களால் வாழப்பெற்றது. சக்தி பூஜித்த அந்த ராத்திரியே சிவராத்திரி.இந்த ராத்திரியில் நாமும் நான்கு கால பூஜை கண்டு வணங்கிட நமக்கு எல்லா நலங்களும் உண்டாகும். இந்த ராத்திரி வேளையில் முதுகுத்தண்டு நிமிர்ந்திருக்க நாம் பக்தி புரிய வேண்டும். இதனால் பிரபஞ்சத்தின் நுட்பசக்திகள் நம் சுவாசம் வழியே நம்முள் நிரம்பும். இதனால் நோயற்ற உடலும், காரியசித்திகளும் உண்டாகும். சிவனருள் வேண்டி விழித்திருந்து பூஜிப்போம் என்றார். ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லைபாலு செய்திருந்தார்.