புதுநெல்லை விதைநெல்லாக வயல்காட்டில் விதைப்பர். அந்த விதைகள் முளை விட்டு நாற்றானதும் வயலில் ‘நாற்றுப் பாவுதல்’ என்று நடவு செய்வர். இதே மாதிரி தான் பெண்களின் வாழ்வும். வடமொழியில் திருமணத்தை ‘விவாஹம்’ என்பர். இதற்கு ‘ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் பதிய வைத்து, அந்த இடத்தை செழிக்கச் செய்வது’ என்பது பொருள். பெண்ணும், ஒரு குடும்பத்தில் பிறந்து மற்றொரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு சந்ததியை தழைக்கச் செய்கிறாள். திருமணம் பெண்ணுக்குப் பெருமை சேர்ப்பதால் தான் தெய்வீகத் திருமணங்களைக் கூட ‘மீனாட்சி கல்யாணம்; வள்ளி கல்யாணம்; சீதா கல்யாணம்’ என பெண் தெய்வங்களின் பெயரால் குறிப்பிடுகிறோம்.