மாப்பிள்ளையை ஊர்நடுவில் இருக்கும் கோயிலில் இருந்து மணவிழாவிற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி மாப்பிள்ளை அழைப்பு. ‘இவர் தான் எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்று பெண்வீட்டார் ஊராருக்கு அறிமுகப்படுத்த இதை நடத்துகின்றனர். மணமகன் மீது ஏதாவது குற்றங்குறை, வேண்டாத சகவாசம் இருந்தால் அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற சூட்சுமும் இதில் அடங்கியிருக்கிறது. மாப்பிள்ளை சொக்கத் தங்கம் தான் என்பதை அறிந்து கொள்ள உரைகல்லாக மாப்பிள்ளை அழைப்பு இருக்கிறது. வடநாட்டில் ‘பராத்’ என்ற பெயரில் இதை விமரிசையாக நடத்துவர்.