பதிவு செய்த நாள்
25
பிப்
2022
06:02
நாகர்கோவில் : சிவராத்திரி தினமான மார்ச் 1ல் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அன்று, குறிப்பிட்ட 12 சிவாலயங்களை பக்தர்கள் ஓடி சென்று வழிபடுவர். சிவராத்திரி நாளில் காலை துவங்கி மறுநாள் அதிகாலை வரை அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள், அனைத்து சிவன் கோவில்களிலும் நடக்கும். மாவட்டத்தில் 12 சிவாலயங்களை ஓடி சென்று வழிபடும் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. கல்குளம் மற்றும் விளவங்கோடு தாலுகாவில் சுமார் 80 கி.மீ., சுற்றளவில் அமைந்துள்ள திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்றிபாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருபன்றியோடு, திருநட்டாலம் சிவன் கோவில்களில் பக்தர்கள் ஓடியும், வாகனங்களிலும் சென்றும் வழிபடுவர். காவி உடை தரித்து கையில் விசிறி, இடுப்பில் திருநீற்று பையுடன் கோபாலா, கோவிந்தா என்று கோஷமிட்டபடி பக்தர்கள் செல்வர்.