திருப்புவனம் பூமாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25பிப் 2022 05:02
திருப்புவனம்: திருப்புவனம் புதூர் எல்லை காவல் தெய்வமான ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.
திருப்புவனம் மாரியம்மன் கோயிலில் வருடம்தோறும் பத்து நாட்கள் நடைபெறும் மாசி திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, பொம்மைகள் உள்ளிட்டவற்றை நேர்த்திகடன் செலுத்துவார்கள், நேற்று இரவு 9:30 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் , பூஜைகள் நடந்தன. கொடியேற்ற வைபவத்தை கண்ணன் பட்டர். செந்தில் பட்டர் நடத்தி வைத்தனர். கொடியேற்றத்தை முன்னிட்டு பூமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கொடியேற்றத்தின் போது நேர்த்தி கடன் விரதமிருக்கும் பக்தர்கள் 10 அடி முதல் 20 அடி உயர மாலை வரை வழங்கியதால் கொடிமரம் முழுவதும் மாலையுடன் காட்சியளித்தது.