சிறுமலை அகத்தியர் சிவ சக்தி சித்தர் பீடத்தில் மகா சிவராத்திரி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2022 10:03
சாணார்பட்டி: சிறுமலை சிவசக்தி சித்தர் பீடத்தில் நான்கு கால பூஜைகளுடன் மகா சிவராத்திரி விழா இன்று நடைபெறுகிறது.
சிறுமலை அகஸ்தியர்புரத்திலுள்ள சிவசக்தி சித்தர் பீடத்தில் சிவசக்தி ரூபிணி அம்மனுக்கு பால் ,பழம் , பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதணை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர். அதனைத் தொடர்ந்து சித்தர் பீட நிர்வாகி சாது சிவசிதம்பரம் இன்று மார்ச் 1 மாலை 6 மணி முதல், நாளை மார்ச் 2 காலை 6 மணி வரை நான்கு கால பூஜைகளுடன் மகா சிவராத்திரி விழா இன்று நடைபெறுகிறது. விழாவிற்கு பக்தர்களை வரவேற்று அழைப்பிதழ் வழங்கினார்.