கள்ளக்குறிச்சி: அ.வாசுதேவனூர் செல்வமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை(15ம் தேதி) நடக்கிறது.கள்ளக்குறிச்சி அடுத்த அ.வாசுதேவனூர் செல்வ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை(15ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி இன்று (14ம் தேதி) கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், கலசஸ்தாபனம், முதல்கால யாகசாலை பூஜை மகா பூர்ணாகுதியும், இரவு 9 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. கும்பாபிஷேக தினமான நாளை காலை 4.30 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, நாடி சந்தானம், சுவாமிகளுக்கு உயிர்ப்பு சக்தி பூஜித்தல், 108 மூலிகை திரவிய ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து 8 மணிக்கு விநாயகர், செல்வமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.