பதிவு செய்த நாள்
14
ஜூலை
2012
11:07
போடி: போடி திருமலாபுரம் நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட சாலைக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.போடி திருமலாபுரம் நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட போடி எல்லையில் அமைந்துள்ள சாலைக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜூலை 15) நடக்கிறது. இதையொட்டி கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, யாகசாலை பிரவேசம், விக்னேஷ்வர வழிபாடு, கும்ப வழிபாடு, தீபாரதனை நேற்று நடந்தது. இன்று அன்னை பராக்கு காலை 8 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 11 மணிக்கு தீபாரதனை, மாலை 6 மணிக்கு யாக வேல்வி, மூன்றாம் கால பூஜை, இரவு 8 மணிக்கு லெட்சுமி பூஜை, தீபாரதனை நடக்கிறது.நாளை (ஜூலை 15) காலை 6.30 க்கு நான்காம் கால பூஜை, 7.30 மணிக்கு நாடி சந்தானம், தீபாரதனை, 8.15 கடம் புறப்பாடு, 8.30 மணி விமான கும்பாபிஷேகம், காலை 9 மணிக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் மூலவர் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி காலை 10.30 அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் கலெக்டர் பழனிசாமி, எஸ்.பி.பிரவீன்குமார் அபிநபு, நகராட்சி தலைவர் பழனிராஜ், போடி பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜபாண்டியர் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை போடி -திருமலாபுரம் நாடார் உறவின் முறை சங்க தலைவர் சூரியன், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் பத்மநாபன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், திருமலாபுரம் நாடார் இளைஞர் சங்கம், மாதர் சங்கம், நாடார் மேல்நிலை, மற்றும் தொடக்கப்பள்ளி நிர்வாகஸ்தர்கள்,உறுப்பினர்கள், காமராஜர் மாணவர் விடுதி நிர்வாகஸ்தர்கள் உட்பட சமூத்தினர் செய்து வருகின்றனர்.