பதிவு செய்த நாள்
02
மார்
2022
05:03
மேட்டூர்: மகாசிவராத்திரி, மாசி அமாவாசையை முன்னிட்டு மாதேஸ்வரன் மலை கோயிலில் பக்தர்களுக்கான கட்டுப்படுகள் தளர்வு செய்யப்பட்டது. கர்நாடகா, கொள்ளேகால் தாலுகா, மாதேஸ்வரன் மலை கோவிலில், மகா சிவராத்திரி, மாசி அமாவாசை பண்டிகை வெகுவிமரிசையாக நடக்கும். கொரோனாவால், அங்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மாதேஸ்வரன் மலையில், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அந்த மாநில வீட்டுவசதி துறை, அடிப்படை வளர்ச்சி துறை அமைச்சர் சோமன்னா தலைமை வகித்தார். சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் சாருலதாசோமல், கொள்ளேகால், அனுார் எம்.எல்.ஏ.,க்கள் மகேஷ், நரேந்திரன், சாலுார் மடாதிபதி மல்லிகார்ஜூன சுவாமிகள், கோவில் செயல் அலுவலர் ஜெயவிபவசாமி முன்னிலை வகித்தனர். அதில், கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட தடைகளை தளர்வு செய்து, மகா சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, மார்ச், 3ல்(நாளை) நடக்க உள்ள தேரோட்டத்தில், அனைத்து பக்தர்களும் பங்கேற்கலாம் என முடிவு செய்யப்பட்டது.