Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ... மாதேஸ்வரன் மலையில் கட்டுப்பாடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் மகாசிவராத்திரி வழிபாடு; பல்லாயிரம் பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2022
05:03

வத்ராயிருப்பு: சதுரகிரிகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மகாசிவராத்திரி வழிபாடு சிறப்புடன் நடந்தது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நேற்று மதியம் 2 மணி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறினார். கோவிலில் இரவு 7:00 மணி முதல் மகா சிவராத்திரி வழிபாடு துவங்கியது. சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களை கோயில் அர்ச்சகர்கள் செய்தனர். இரவு 8 மணி, 12:00 மணி, அதிகாலை 2:00 மற்றும் 5:00 மணி வரை நான்கு கால சிவராத்திரி பூஜைகள் நடந்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், உணவு வசதி செய்யப்பட்டிருந்தது. தாணிப்பாறையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், மதுரை உட்பட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வத்திராயிருப்பு, சாப்டூர் பகுதி போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் இன்று நடைபெற்ற ஐப்பசி பிரதோஷ வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
மஹாராஷ்டிராவில் விஜய யாத்திரை மேற்கொண்ட சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar