காசி என்றதும் நம் நினைவில் எழுவது கங்கை நதியும், காசி விஸ்வநாதர் கோயிலும் தான். விஸ்வ நாதருக்கு தினமும் இரவு 7.45 - 8.30 மணி வரை சப்தரிஷி பூஜை நடக்கும். அத்ரி, வசிஷ்டர், கஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய ஏழு பேரும் சப்தரிஷிகளாவர். வானமண்டலத்தில் சனி உலகத்திற்கு வடக்கே சப்தரிஷி மண்டலம் உள்ளது. அங்கிருந்து வந்து தினமும் காசி விஸ்வநாதரை இவர்கள் பூஜிப்பதாக ஐதீகம். இதனை குறிக்கும் விதத்தில் கருவறையில் ஏழு அந்தணர்கள் (7பண்டாக்கள்) சூழ்ந்து நின்று பூஜை நடத்துவர்.